நாட்டுக் கோழியின் விலை அதிகமா? நிச்சயமாக இல்லை!.

நாட்டுக் கோழியின் விலை அதிகமாநிச்சயமாக இல்லை!.  
பிற்காலத்தில்  மருத்துவத்தில் செலவழிக்க போகும் பணத்தை விட நாட்டுக் கோழியின் விலை மிக குறைவுதான்.
தற்சார்பு விவசாய உணர்வில் வாழும் நாம், பிராய்லர் கோழி நம் நாட்டு உணவு அல்ல என்பதை உணர்ந்து பிராய்லர் கோழிகளை முடிந்த வரை தவிருங்கள். குறைவாக சாப்பிட்டாலும் மன நிறைவுடன் நாட்டுக்கோழிகளை சாப்பிடுங்கள். முடிந்தவரை நாட்டு கோழி, இயற்கை காய் கறிகள், பழங்கள், தானியங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளன் போன்ற வற்றை தவிர்த்து சத்து மாவு கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள். முடிந்தால் விவசாயிகளிடம்  நேரடியாக வாங்குங்கள். விலை குறைவாக கிடைப்பதுடன் வாங்கும் பொருள் தரமானதாகவும் மனநிறைவுடனும் இருக்கும்.
உங்களுக்கு கோழி வளர்க்கும் சூழலும் ஆர்வமும் இருந்தால் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ, ஏன் வீட்டு மாடியிலோ கூட நீங்கள் நாட்டுக் கோழிகளை வளருங்கள். இப்போதே முயற்சி எடுக்கா விட்டால் நம் நாட்டுக் கோழியை அயல் நாடுகளிடம்  இருந்து பதப் படுத்தப்பட்டு வரவைத்து சாப்பிடும்  நிலை மிக விரைவில் வரும்.
இவ்வளவு அட்வைஸ் பண்ணறானே இவன் யாருன்னு தோணுமே. நானும் ஒரு விவசாயி. நான் அலுவலக பணியை துறந்து கடந்த 4 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய விவசாயம் சிறப்பாக செய்து வருகிறேன்.
நாட்டு கோழி  உயிர் எடை ரூ. 200/kg. பண்ணையிலேயே இயற்கை முறையில் சுத்தம் செய்து தரப்படும். அதிகம் தேவை படுவோர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. புரட்டாசி சலுகை நிச்சயம் உண்டு. விவசாயிகளுக்கு கை கொடுங்கள் தோழர்களே. ஞயிற்று கிழமை(Sunday) மட்டும் சுத்தம் செய்யப்பட்ட கறி ரூ. 250/kg விலையில் தேவைக்கு ஏற்ப கிடைக்கும். சேவல் 2kg முதல் 3.5kg வரை கிடைக்கும். சுத்தம் செய்யப்பட்ட இறைச்சி சேலம், ஆத்தூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய இடங்களுக்கு பஸ் மூலம் டெலிவெரி செய்யப்படும்.
கோழி பண்ணை வைக்க விரும்புவோர்க்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பு பயிற்சி மற்றும் கையேடு அளிக்க படும்.





Ruchi Farms, 

நாட்டு கோழி பண்ணை,
மலையாளப்பட்டி ரோடு, A.மேட்டூர்,
அரும்பாவூர் டவுன், பெரம்பலூர் மாவட்டம்.
தொடர்புக்கு cell : +917502375100, e’mail : RuchiOrganicFarms@gmail.com


பதிவு செய்யப்பட்ட நாள்: செப்டம்பர் 2017.

Comments

Popular posts from this blog

Country Chicken